காதல் செய்வோம்

நீயும் நானும் ஜோடியாக‌
ஆடுவோமா உடம்பு நோக‌
தேயும் நிலவும் ஒளிரும் நாளை
பேயும் மழையும் விடியற் காலை
ஊடல் மனதை ஒதுக்கிவிட்டு
காதல் செய்வோம் சேர்ந்துக்கிட்டு
வானிலே ஓடுவோம் காதலாலே
வானதை அளப்போம் அன்பினாலே
மொத்தமும் அளந்த பின்னே
எட்டிப்பிடிப்போம் நிலவை
காதல் இசை நாம‌மைத்து
நிலவினில் பாடுவோம்

எழுதியவர் : Velanganni A (29-Dec-17, 11:50 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaadhal seivom
பார்வை : 68

மேலே