உள்ளக்கடத்தல்
உள்ளக்கடத்தல் செய்த. வல்லியே..
உனை பார்க்கும் போது
இதயம் ' க ச ட. ப ற' என அடிக்கும்..
எனை நீ கடக்கும் போது மெல்லியளே..
உன் சுவாசக்காற்றை நுகரும்
என் நாசி...
' ங ஞ ண ந ம ன ' என. விரியும்!
எனை நேசிக்கிறாயா?
என நீ வினவும் போது,
குறுகிய இடையாளே..
என் நா(வு) ' ய ர ல. ழ. ள'
என குழறும்;
கயல் விழியாளே..
வல்லினமும்,மெல்லினமும்,இடையினமும் ஆக
தமிழ் இலக்கணத்தையே
கற்றுக்கொண்டேன் நான்
உன்னாலே!!