தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி4

செய்யாத குற்றத்தைச் செய்ததாக அவமானப்படுத்தும் போது அதற்காக கோபம் கொண்டு பழிவாங்க நினைக்கிறது கயமை மனம்.
தான் ஆற்ற வேண்டிய கடமையைச் சிந்தித்து அறிகிறது தூய்மை மனம்.

பேரூந்து சென்றுவிட்டது.
அவமானப்படுத்தியவர்களும் சென்று விட்டார்கள்.
ஜோசப்பின் மனதில் தன் மேல் கோபமும் வெறுப்புமே நிரம்பி இருந்தது.
நகரத்திற்கு நடந்தே சென்று சர்ச்சில் மேரியம்மாவைச் சந்தித்தார்.

" என்னப்பா ஜோசப்! உன் முகம் வாடியிருக்கு. ", என்று மேரியம்மா கேட்க, வேதனை நிறைந்த மனத்தோடு நடந்ததை உள்ளவாறு உரைத்தார் ஜோசப்.

புன்னகைத்த மேரியம்மா, " அப்போ நீ நடந்தா வந்த? ", என்றிட, " ஆம் ",என்றான் ஜோசப்.

" அப்படியெனில் உன்னை அவமானப்படுத்தியவருக்கு நீ மிகப் பெரிய தண்டனை கொடுத்துவிட்டாய்.
இனி நீ பேரூந்தில் வர வேண்டாம்.
உனக்கொரு இருசக்கர மோட்டார் வாகனம் வாங்கிக் கொள். ",என்றார் மேரியம்மா.

" உண்மை தெரியாமல் அந்த பெண் பேசியது கூட என்னைக் காயப்படுத்தவில்லை.
ஆனால், பேரூந்தில் வந்த அயோக்கியரெல்லாம் யோக்கியனைப் போல ஏன்டா டேய்! இதற்காகத் தான் தினம் பேரூந்தில் வருகிறாயா? என்று கேட்டார்கள். அதுவே என் மனதைக் கஷ்டப்படுத்தி விட்டது அம்மா. ",என்றார் ஜோசப்.

" சரி, இப்போது நீ என்ன செய்ய நினைக்கிறாய்? ",என்ற மேரியம்மாவிடம், " அந்த வழியில் ஒரே பெருந்து தான் இயங்கி வருகிறது. எப்போதும் கூட்டமாக இருக்கும்.
அதனால் அந்த வழியில் பேரூந்து இயங்கினால் நல்லாயிருக்கும் என நினைக்கிறேன். ",என்றார் ஜோசப்.

" ம்ம். சரி, அதற்கான ஏற்பாட்டை உடனடியாகக் கவனிக்கிறேன். ",என்று உறுதியளித்தார் மேரியம்மா.

ஜோசப்பும் நன்றி கூறிவிட்டு அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு சேவை செய்ய தொடங்கினார்.

சேவை முடித்து மீண்டும் நடந்து சென்றார் கிராமத்திற்கு.

மருத்துவமனையில் தன் பணிகளை மிகச் சரியாகச் செய்தார் ஜோசப்.

தவறு செய்த மனம், மன்னிப்பு கேட்கத் தயங்காது. தான் இழைத்த தவறென உணர்ந்தால்.
இது தூய்மையான மனதிற்குரிய குணம்.

அதே கயமையான மனம் மன்னிப்புக் கேட்க விரும்பாது.
இவனிடம் போய் நாம் மன்னிப்பு கேட்க வேண்டுமா? என்று அகந்தையில் கௌரவம் கொண்டிருக்கும்.

சித்ராவின் மனமோ தூய்மையானது.
மிகவும் வருத்தப்பட்டாள்.
அண்ணனை இந்த காயத்தில் ஜோசப்பை இவள் காயப்படுத்தியது எண்ணி எண்ணி கோதை நெஞ்சம் கதறியது.

அண்ணன் அசோக் இப்படி யாரையும் காயப்படுத்த மாட்டான்.
இராணுவத்திற்கு செல்லும் முன் அண்ணன் வழங்கிய அறிவுரைகளை நினைத்துப் பார்த்தாள் சித்ரா.

கடைசியில் மன்னிப்பு கேட்க முடிவு செய்தாள்.
மறுநாள் பேரூந்தில் ஜோசப்பைத் தேடினாள்..
அவர் வரவில்லை.
எப்படி வருவார்?
தன்மானம் உள்ளவராயிற்றே!

ஆதலால் மருத்துவமனைக்கே சென்று மன்னிப்புக் கேட்க நினைத்து அங்கு சென்றார்.
அங்கு நோயாளிகளின் வரிசையில் காத்திருந்தார்கள்.

ஒவ்வொருவராக டாக்டரிடம் சென்று மருத்துவம் பெற்றுவர காத்திருத்தாள் சித்ரா.

கணேஜ் சென்று ஜோசப்பிடம், " உங்களைக் காண அந்தப் பெண் வந்துள்ளாள். ",என்றிட,
கண்ணாடி கதவு வழி கவனித்த ஜோசப், " நோயாளிகளை மட்டும் உள்ளே அனுப்பு. ",என்று கட்டளையிட்டுவிட்டார்.

அனைத்து நோயாளிகளும் மருத்துவம் பெற்று சென்று விட்டனர்.
சித்ரா அப்போதும் காத்திருந்தாள்.

தனது அறைவிட்டு வெளியே வந்த ஜோசப் சித்ராவைக் கடந்து சென்றார்.
" சார். ",என்று சித்ரா அழைக்க, ஜோசப், " நோயாளிகளுக்கு மட்டுமே இங்கு என்னிடம் பேச அனுமதியுண்டு. அநாவசியமாக யாரிடமும் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. புரிந்ததா கணேஷ்?. ",என்று கூறிவிட்டு வேகமாகச் சென்றார்.

சித்ராவிற்கு மேலும் அழுகை வந்துவிட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, கடிதம் ஒன்றை எழுதி அதை கணேஷிடம் கொடுத்து ஜோசப்பிடம் கொடுக்கச் சொல்லிவிட்டு தன் வீட்டிற்குச் சென்றாள்.

தன் அறைக்குச் சென்றவள் படுத்துக்கொண்டாள்.
தலையணைக் அவள் கண்ணீரால் ஈரமானது.

கணேஷ் ஜோசப்பிடம், " அந்தப் பெண் அழுதுட்டே இதைக் கொடுத்துட்டு போச்சு அண்ணே. ",என்று அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்.

வாங்கிய ஜோசப், " பண்றதெல்லாம் பண்ணிட்டு அழ வேற செய்கிறாளா? ",என்று அந்தத் தாளைக் கசக்கிப் போடக் கண்ட கணேஷ், " பாவம் அண்ணே அந்த பொண்ணு! அவளுடைய அண்ணன் அசோக், இராணுவத்தில் பணிபுரிந்தான். பத்து மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டான்.
அப்போது அந்தக் குடும்பமே அழுதது.
கொஞ்சம் கொஞ்சமாக இந்த பெண் அந்தக் கவலையிலிருந்து மீண்டு சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால், மீண்டும் இப்போது அழுகிறாள்.
அசோக் ரொம்ப நல்லவன்.
யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டான். அவனுடைய அப்பா சுப்புராஜ் இராணுவத்தில் பணியாற்றித் தன் காலைப் பறி கொடுத்தவர். நான் சொல்றதைச் சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம் அண்ணே!. ", என்று கூறிவிட்டுச் சென்றார்.

சிறிது யோசனைக்குப் பிறகு அந்தக் காகிதத்தை எடுத்தார்..
பிரித்து படித்தார்.
படித்தவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அதில், " என் அண்ணன் அசோக் அடிக்கடி என்னிடம் சொல்லுவான். இப்படி சிந்திக்காமல் பேசாதே. நான் அதைக் கேட்காமல் மனதில் பட்டதைப் பேசிவிடுவேன். ஆனால், அது இப்படி உங்களைக் காயப்படுத்தும் செயலுக்குக் காரணியாக அமையும் என்று எனக்கு தெரியாது. இப்போது நான் நினைக்கிறேன், என் அண்ணன் இறந்ததற்குப் பதிலாக நான் இறந்திருக்கலாமென்று.
மன்னிப்பு கேட்கவே வந்தேன்.
மன்னித்துவிடுங்கள். ",என்று எழுதப்பட்டிருந்தது.

அன்றிரவு ஜோசப்பிற்கு தூக்கமே வரவில்லை.
காலை விடிந்தது.

சித்ரா கல்லூரி செல்ல பேரூந்திற்காகக் காத்திருந்தாள்.
அரசு பேரூந்து வந்தது.
ஆள் ஏறமுடியாத அளவிற்கு கூட்டமாக இருந்ததால் நிற்காமல் சென்றது.
இனி பேரூந்து இல்லையென்று பாதிபேர் வீடு திரும்ப, பாதிபேர் நகரத்தை நோக்கி நடக்க,
ஹாரன் ஒலி எழுப்பியபடி வந்து நின்றது அன்னை மேரி பஸ்.

மக்களெல்லாம் திரும்ப வந்து ஏறிக் கொள்ள,
பேரூந்தின் டிரைவர் சீட்டில் ஜோசப் இருந்தார்.
முதல் ட்ரிப் என்பதால் அவர் ஓட்டிக் கொண்டு வந்தார்.
எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது சித்ரா உட்பட.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Dec-17, 3:08 pm)
பார்வை : 201

மேலே