ஒருபிடி சாம்பலுக்காக
ஆலயங்கள் பல கோடி, உடல் ஆலயங்கள் உட்பட
ஆலயங்கள் பல கோடி, ஆலயங்களில் குடிகொண்ட
கயமைகள் பல கோடி, கயமைகளால் நிகழும்
சூழ்ச்சிகள் பல கோடி, சூழ்ச்சிகளால் நிகழும்
வீழ்ச்சிகள் பல கோடி, என்ன தான் கோடியில் புரண்டாலும் கடைசியில் மிஞ்சும்
சாம்பலோ ஒரு பிடி...