சட்டம் யார் கையில்

சட்டம் யார் கையில் :

ஐந்துக்கும் பத்துக்கும் உன் உரிமை விற்றால்
ஐந்துக்கும் உனக்கும் வேற்றுமை தான் உண்டோ?
ஐந்தாறு இலவசங்கள் கண்ட உன் கண்களுக்கு
ஆறு கோடி மக்களின் விதி என்னவென்று அறியுமோ?
மாக்களோடு கூடியிங்கு வாழ்ந்துக் கெட்ட தேசமே
கேள்வி கேளா நாக்குகளும் நாண்டு இங்கு சாகுமோ?
பாமரனின் குடிக்கெடுத்து சாதனைகள் புரிந்திட
பாரெங்கும் பார்த்தாளும் பிரதேசங்களும் புகழுமோ?
கண் காது வாய் மூடி நின்ற கோல வானரமாய்
சிறு பெண்டிர்தம் மானமும் காற்றில் பறக்க காண்பீரோ?
இட்டு வைத்த சட்டமெல்லாம் சுட்ட வடையானது
குள்ள நரிக் கூட்டமெல்லாம் கூடி இங்கு வாழுது
பெற்ற நாடும் தின்ற சோறும் அன்னை தந்த வீரமும்
தரணியாண்ட பேரினமே உனையாளும் சட்டம் இனி உமது கையில்...

- தமிழ் ப்ரியா...

எழுதியவர் : தமிழ் ப்ரியா (30-Dec-17, 11:42 pm)
Tanglish : sattam yaar kaiyil
பார்வை : 100

மேலே