காலண்டரில் இறைவன் படம்

தெருவோர சிறு கோவில்கள் பக்கம்
தெருமுனை குப்பை தொட்டிகள் பக்கமும்
நேற்றுவரை கும்பிடப்பட்ட பல பல
இறைவன் படமுடைய கடந்த கால
'காலெண்டர்' அட்டைகளாய் வீசப்பட்டிருப்பது
கண்டு ஒவ்வோர் வருடமும் மனசு
வேதனைப்பட்டாலும் அதை
கவிதை மூலம் சொன்னாலும் இன்றுவரை
இதை கண்டுகொண்டோர் யாரும் இல்லையே
இதோ ! இன்னும் புது வருடம் பிறக்க
சில நாழிகைகள் இருக்க கேட்கவில்லை என் மனம்
மீண்டும் விண்ணப்பிக்கின்றேன் -தயவிட்டு
நாம் போற்றி துதிக்கும் இறைவன் படம்
தாங்கி வரும் 'காலண்டர்' அட்டைகளை
வீசி ஏரியாதீர் ! இப்படி இறைவன் படம்
நமக்கு தேவையா ! சிந்திப்பீர்! இறைவன்
உள்ளத்தில் உள்ளார் , கோவில்களில் உறைகிறார்
உளமார தொழுதிட

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (31-Dec-17, 7:30 am)
பார்வை : 77

மேலே