சட்டம் யார் கையில்
வீதியெங்கும் மதுக்கடை
போதையில் குடிமகன்கள்
இலவச போதையில் குடிமக்கள்
வரி ஏய்ப்பவன் ஆகிறான் முதலாளி
வாழ வழியின்றி தவிக்கிறான் தொழிலாளி
ஊர்ந்து போகும் ஊழல் வழக்கு
ஊதாரித்தனத்தில் கரையுது பொதுநிதி
கறை படிந்த கைகளில்
மாட்டிக்கொண்ட கரைவேட்டிகள்
தள்ளாடும் சுயநலத் தலைமைகள்
குருட்டு வழக்கறிஞர்கள் கையில்
செல்லரித்த சட்டங்கள்
காத்திருக்கின்றன
தேவை ஒரு இராணுவப் புரட்சி