அதிர்ச்சி

"என் மனைவி ரொம்ப மாறீட்டா... மருமக வித்யாவ போட்டு பாடா படுத்தறா... நான் சொன்னாலும் எங்கிட்ட சண்டைக்கு வாரா.. வித்யாவ பாக்கவே பாவமா இருக்கு", என்று தன் சினேகிதன் மாணிக்கத்திடம் புலம்பிக்கொண்டிருந்தார் ரிடையர்டு ஜட்ஜ் சிவாஜி.

"என்னப்பா சொல்ற.. கமலாவா இப்படி..! நம்பவே முடியலையே..!", என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் பால்ய சினேகிதன்.

"என்ன.. நம்ப முடியல இல்ல... நீ வேணா எங்க வீட்டுக்கு வந்து பாரு.. அப்பறம் நம்பறதும் நம்பாததும் உன் இஷ்டம்", என்று தனது ரிடையர்டு ஐஜி ப்ரெண்டு மாணிக்கத்தை சீண்டிப்பார்த்தார் சிவாஜி..

"ஓகே.. நான் வீட்டுக்குள்ள வர்ல.. ஆனா வெளிய மறைஞ்சு நின்னு வேணா பார்க்கறேன்.. ஏன்னா என்ன பார்த்த பின்னாடி கமலா வேற மாதிரி பிகேவ் பண்ண சான்ஸ் இருக்குல", என ஒரு வழி சொன்னார் மாணிக்கம்..

அந்த ப்ளான் படியே இருவரும் சிவாஜியின் வீட்டிற்குச் சென்றனர்.

மாணிக்கம் வெளியே ஜன்னல் அருகில் மறைந்து நின்று கொண்டார்..

உள்ளே சென்ற சிவாஜிக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. கிச்சனில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார் அவரது தர்மபத்தினி.. மருமகள் திவ்யாவைக் காணவில்லை..

ஓடியாடி வேலை செய்யற அளவுக்கு அப்படி என்ன நடந்து போச்சு.. என்று குழம்பிய சிந்தனையில் இருந்தார் மாணிக்கம்..

வெளியே நின்ற படி சிவாஜியைப் பார்த்து கேலியாக சிரித்துக்கொண்டிருந்தார் மாணிக்கம்..

கேட்டுக்கு வெளியே ஹாரன் சவுண்டு வரவே.. இன்னும் நன்றாக ஒளிந்துகொண்டார் மாணிக்கம்..

காரிலிருந்து இறங்கி கையில் பத்து பதினைந்து பைகளுடனும், திவ்யாவுடனும் ஷாப்பிங் செய்துவிட்டு வந்து கொண்டிருந்தார் ரிட்டையர்டு கலெக்டரான சிவாஜியின் அம்மா.. அதாவது கமலாவின் மாமியார்...

"வந்திட்டீங்களா அத்தே..", என்ற படி அவரது கையிலிருந்த பைகளை வாங்கிச்சென்றார் கமலா... சிரித்தபடி நின்றிருந்தனர் இரு நண்பர்களும்..

(முற்றும்)

எழுதியவர் : Velanganni A (3-Jan-18, 9:26 pm)
Tanglish : athirchi
பார்வை : 250

மேலே