அட்வான்ஸ் கம்பரின் கன்னி மடல்

***பெண் என்பவள்
நான் தினமும் ஒன்றைக் கற்றுக்கொள்ளும் கைபேசி தான்...

>>என்னவளின் கண்கள் இரண்டும் ஒரு ***ப்யூட்டி பிளஸ் கேமரா***

>>குலுங்கி பதுங்கும் கூந்தல் ஒரு ***கூகுள் தீம் சென்டர்***

>>சொல்வதெல்லாம் கேட்கும் செவிகள் ஒரு
***கூகுள் ரெக்கார்டர்***

>>கிளி வாய்பேச்சு பலகுரல் கேட்கும்
***கூகுள் ப்ளே மியூசிக்***

>>ஈரத்துடன் மிதந்து கிடக்கும் இதழ்கள் இரண்டும் ஒரு
***கூகுள் அசிஸ்டென்ட்***

>>நினைவுகளை சேமிக்கும் மூளை ஒரு
***கூகுள் கிளவுட் ஸ்டோரேஜ்***

>>நினைவுகளை இணைக்கும் இதயம் ஒரு
***இ எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர்***

>>அறிவுடன் கேட்கும் கேள்விகள்
***கூகுள் ஹங்கௌட்***

>>அறிவோடு கூறும் பதில்கள்
***கூகுள் வாய்ஸ் சேர்ச்***

>>அன்போடு அனைக்கும் கைகள் ***கூகுள் கி ஃபோர்டு***

>>ஆசையோடு வழிநடத்தும் கால்கள்
ஒரு ***கூகுள் மேப்***

கம்பன் வானிறங்கி பெண்ணழகை வர்ணிக்க வந்தால் கூட இப்படியெல்லாம் டெக்னாலஜி ஒன்றி தான் பாடவேண்டும்...
வளர்ந்தது தொழில்நுட்பமும், துறைகளும்... ஆனால்
பின்தங்குவது நம் பண்பாடும், கலாச்சாரமும் உடன் தமிழின் பெருமையும் தான்...

எழுதியவர் : மு நாகராஜ் (6-Jan-18, 5:21 pm)
பார்வை : 96

மேலே