தாய்,தந்தை அன்பு

பத்து மாதம் சுமந்து
பதினெட்டு வருடம் வளர்த்து
பதின்ம பருவத்தில் பாழாகி விடக்கூடாதென்று
உன்னை பாதுகாத்து
பல இடங்களில் உனக்குரியவனை
தேடியலைந்து
தேடி எடுத்து
பலர் முன் அவனிடம் உன்னை ஒப்படைக்கும்
தருணம் கூட
பெற்றோர்களின் சந்தோஷம் கண்ணீரில் தான் முடிகிறது
காரணம்:
பத்து மாதம், பதினெட்டு வருடம்
பார்த்து வளர்த்த உன்னை இனி பார்க்காமல் வாழப்போகிறோமே என்று...!

எழுதியவர் : முஸ்தபா (7-Jan-18, 12:44 am)
பார்வை : 6019

மேலே