அம்மாவும் நானும்

==>>> அம்மா சுவர் என்றால்
=அதில் வரையப்பட்ட சித்திரம் நான்....

==>>>அம்மா மலர் என்றால்
=மணம் பரப்பும் மகரந்தம் நான்

==>>>அம்மா வளி என்றால்
=அதில் இருக்கும் துரும்பு நான்

==>>>அம்மா பாறை என்றால்
=பாறையில் வடிக்கப்பட்ட சிற்பம் நான்

==>>>அம்மா கடல் என்றால்
=அந்தக் கடலில் மிதக்கும் ஓடம் நான்

==>>>அம்மா பட்டு என்றால்
=அதில் நெய்யப்பட்ட ஆடை நான்

==>>>அம்மா மேகம் என்றால்
=அதில் பிறக்கும் மழை நான்

==>>>அம்மா கட்டில் என்றால்
= சொகுசாக உறங்கும் மெத்தை நான்

==>>>அம்மா தூண்டுகோல் என்றால்
=தெளிவாய் ஒளிரும் தீபம் நான்

==>>>அம்மா சிப்பி என்றால்
=உயர்வாய் மதிக்கும் முத்து நான்

==>>>இப்படி பிள்ளை சுகமும், சம்பத்தும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ, வெற்றிகள் பெற்றிட தாய் பெறும் வலிகளையும், துன்பங்களையும் சொல்ல வார்த்தைகள் இல்லை அகராதியில்....

எழுதியவர் : நாகராஜ் மு (7-Jan-18, 1:27 pm)
Tanglish : ammavum naanum
பார்வை : 1364

மேலே