கம்பன் ஏமாந்தான்

###கம்பன் ஏமாந்தான்###
கம்பனிவன் ஏமாந்தேன்
கவன்கன்னியிவள் அம்பெய்த;
அடைப்பட்ட அணைத்திறக்க
அளபெடுப்பாய் அறநெறியே:

கம்பனென் கட்டுத்தறியும்
கவிபாட -நீயேயென்
கவியானாய் ..........

என் துஞ்சலெல்லாம்
கெஞ்சட்டும் நீ
கொஞ்சிப்பேசத் தஞ்ட்டும்:

காவியம் பலப்படைத்தேன்
இவள் படைப்பே
காவியமாய் தீட்டிய
ஓவியமாய்...........

இந்த ஓவியத்தின்
வண்ணமாய் வாரிரைத்து
வடிந்தொழுக வாடியபயிரின்
மாமாரி நீமட்டும்
பூமாரி!!!!!!!

ஆயிரம் ஏட்டெழுதியேந்திய
கரங்களிது- மீட்டவே
துடிக்கிறதே யாழிவள்
பூங்குழலை.........

புலனின்பம் போதுமா?
புனளிவளுள் பிணைந்திடவே
கனல்கக்கும் கன்னிவான்
கறைபடியா கண்ணியமான்.......

பாவையிவள் பார்வையினால்
பனிமலையும் கரைகிறது;
அடிமுடியும் நொடிசேர
பாலென்னப் பகுத்தறிய:

நீர்மகன்றில் நிலைப்போல
தழைத்திடுவாய் தூந்தளிரே
உரைந்திடுவாய் உயிர்தனிலே;
கனவதனின் தேவதையின்
கைசேரப் பார்த்திருப்பேன்
ஏமாந்தேனும் காத்திருப்பேன்!!!!!!!!!
இப்படிக்கு ,
கம்பன்....

எழுதியவர் : ரம்யா கார்த்திகேயன் (8-Jan-18, 12:37 am)
பார்வை : 86

மேலே