முடி நரைத்தாலும் முத்தமிடுவேனடி

ஒரு பெரிய பில்டிங்ல் இருந்து சற்று நரைத்த உரோமங்களுடன் ஒரு ஜோடி கிளிகள் நடந்து வந்தன
அந்த கிளியில் ஒன்று நடக்க கஷ்டப்பட்டது மற்றொன்று மனகஷ்டத்துடன் நடந்து வந்தது. சாலையோரம் பெண்கிளி ஆண்கிளியின் கையை பிடித்துக்கொண்டது

ஆண்கிளியின் பெயர் முத்துராமன் பெண்கிளியின் பெயர் வள்ளி

வள்ளி எதாச்சும் சாப்பிடுறியாமா என பாசத்துடன் முத்து கேட்க இல்லைங்க வேணா பசிக்கல.
இல்லமா எதாச்சும் ஜுஸ் ஆச்சும் குடிக்குறியா அட வேணாங்க என வள்ளி முறைத்தாள் .

சரி விடு என முத்து அமைதியானார் .
ஏங்க நீங்களே தனியா வீட்டுக்கு கஷ்ட்ட படுறிங்க என்னாலையும் வேலைக்கு போக முடியல அந்த சிப்காட் வேலை போனப்போ எதோ உங்க கஷ்ட்டத்த கம்மி பண்ண இப்போ சிப்காட்டுகுள்ள போனாலே அந்த கெமிக்கல் நெடி தாங்க முடியல அதும் இல்லாம இப்போ அவனுங்க கொஞ்சம் வயசானா கூட வேலைய விட்டு நிறுத்திடுராங்க நான் என்ன கொமரி அம்பத்து எட்டு ஆகுது
இப்போ நீங்க மட்டும் வீட்டுக்கு சம்பாதிக்குரீங்க செக்குரிட்டியா அது சாப்பிடுரதுக்கே சரியா இருக்கு

இப்படி ஜுஸ் அது இதுன்னு குடிச்சா காசுக்கு எங்க போறது ஒழுங்கா வாய மூடினு வாங்க என வள்ளி வார்த்தையால் வாயை அடைத்தாள்

எப்போவாச்சும் தானமா ? தெனமுமா உன்ன ஜுஸ் குடிக்க சொல்லுறன் என சொல்லி அருகில் உள்ள கடைக்கு அழைத்து போனார் கடையில் போர்டில் இலக்கியா ப்ரெஸ் ஜுஸ் என பெயர் இருந்தது . உள்ளே சென்று வள்ளியை பார்த்து என்ன ஜுஸ் மா வேணும் என கேட்டார் முத்து .

ஒரு எலுமிச்சை ஜூஸ் போதும் என சொன்னாள் வள்ளியை பார்த்த முத்து ஏன்மா இது தான் கம்மியா இருக்கும்னு கேக்குறியா வள்ளி சிறிய புன்னகைத்தாள் .

சரியான ஆளு தான் நீ என வள்ளியை பார்த்து ஆனந்த அதட்டளை அவளுக்கு தண்டனையாக்கி ஒரு மாதுளை ஜுஸ் கொடும்மா என அங்கே கடையின் உள்ளே இருந்த வயது பெண்ணிடம் சொன்னார் .

வள்ளி என்னங்க ஒன்னு மட்டும் சொல்லுரிங்க உங்களுக்கு ஏதும் வேணாமா ஒழுங்கா இன்னொரு ஜுஸ் சொல்லுங்க என அதட்டினாள் இல்ல வள்ளி எனக்கு வேணா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தண்ணி குடிச்சன் வயிறு புல்லா இருக்குமா . எனக்கும் தண்ணிய கொடுத்து இருந்தா இப்போ இந்த ஜுஸ் காசு தண்ட செலவுதான . பழம் சாப்டா உடம்புக்கு நல்லதுமா அதே தான் நானும் சொல்றான் பழம் சாப்டா உடம்புக்கு நல்லது என வள்ளி சொன்னாள்

.இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஜுஸ் போட்டுகொண்டு இருந்த பெண் மனதிற்குள் சிரித்துக்கொண்டே மேலும் ஒரு பழத்தை சேர்த்து அரைத்து ஒரு கிளாஸ் ஜுஸு ம் மற்றொரு கிளாசில் அரை அளவு ஜுஸ் கொண்டு வந்து கொடுத்தாள் . என்னம்மா ரெண்டு கிளாஸ் ல கொடுக்குற நான் ஒன்னு தானம்மா கேட்டன் என முத்து கேட்க அதற்கு அந்த பெண் ஒரு ஜுஸ் தான் கொஞ்சம் அதிகமா ஆயிடுச்சு என சொன்னால்

வள்ளி திடிரென மற்றொரு கிளாஸில் உள்ள ஜுஸில் ஊற்றினாள் இப்போ நீங்களும் குடிங்க என சொல்லி குடிக்க வைத்தாள் . விடமாட்டியே என முத்து சொல்லிவிட்டு குடித்தார்

குடித்துக்கொண்டு இருக்கும் போதே கடையில் இருக்கும் பெண்ணிடம் உன் பேரு என்னம்மா என முத்து கேட்டார் .
என் பேரு
இலக்கியா என சொன்னாள் . இங்க தான் வேலை பாக்குறியாமா இல்லைங்க இது எங்களோட கடை அப்பா வீட்டுக்கு போய் இருக்காரு நான் லீவ் நாள் ல இங்க வருவான் எப்போவாச்சும் . நீ என்ன பண்ணுற மா நான் எம் எஸ் சி மேத்ஸ் படிச்சிட்டு இருக்கன் நல்லதுமா நல்லா படி என சொல்லிவிட்டு குடித்த கிளாசை அவளிடம் கொடுத்துவிட்டு ஜுஸ் எவ்வுளவு மா என முத்து கேட்டார் முப்பத்தி அஞ்சு ரூபா என சொன்னாள் சொன்னதும் வள்ளி இவ்வுலோ வா கேட்டாள் ஆமா என சொன்னாள் . சரிமா என பணத்தை கொடுத்துவிட்டு போய்ட்டு வர என சொல்லிவிட்டு வள்ளியை அழைத்து வந்தார்

வெளியே வந்ததும் முத்துவை கடிந்தாள் வள்ளி . ஏங்க இவ்வுலோ ரூபா கொடுத்து ஜுஸ் குடிக்கனுமா .அட விடு மா அதையே சொல்லிக்கிட்டு என சமாதானபடுத்திவிட்டு பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தார் முத்து . வள்ளி எங்கயாவது போலாமா என கேட்டார்

என்ன இந்த ஆளு பேசறதே சரி இல்லையே என மனதிற்குள் நினைத்துக்கொண்டு எங்கையும் வேணா வாங்க ஒழுங்கா வீட்டுக்கு போலாம் என சொன்னதும் முத்து அதுல்லாம் இல்ல வா எங்கியாச்சும் போலாம்

பக்கத்துல கோவிலுக்கு போலாமா மணி பன்னெண்டு ஆகுது நடை தெறந்து இருப்ப்பாங்க வாமா போகலாம் என கோவிலுக்கு அழைத்து சென்றார்

கோவிலில் கடவுளை பார்த்து வள்ளி மனம் உருக வேண்டிக்கொண்டு இருந்தாள்

அவளை பார்த்து தனக்குள் கடவுளின் மேல் உள்ள வெறுப்பை காட்டிக்கொண்டார் முத்து . கோவிலை மூன்று முறை இருவரும் சுத்திவிட்டு ஒரு தூண் அருகில் வந்து உக்காந்து இருந்தனர் .

சிறிது நேரம் அமைதியாக இருந்தனர் இருவரும் . வள்ளி ஆரம்பித்தாள் என்னங்க என்ன திடிர்னு மாறிடிங்க வெளிய இட்டுனு போறீங்க என்ன ஆச்சு உங்களுக்கு . அட அதுலாம் ஒன்னும் இல்லை இவ்வுளவு நாள் தான் நம்ம புள்ளைங்க புள்ளைங்க னு பாத்து பாத்து சிக்கனமா வாழ்ந்தோம்

இதுவரைக்கும் நீ ஒன்னும் அனுபவிக்கல நானும் உனக்கு ஒண்ணுமே பண்ணல எங்கயும் வெளியையும் இட்டுனு போகல புள்ளைங்க நம்மள விட்டுட்டு பொண்டாட்டி தான் வேணும் னு அவளுகளோட வெளிய போய்ட்டானுங்க இனிமே எதுக்கு டி சிக்கனமா இருக்கணும்.

நல்லா உன்ன வச்சிக்கணும் னு தான் வெளிய இட்டுனு வந்தன் என முத்து முடித்தார் .அய்யே பசங்களுக்கு பாசம் இல்லன்னு யாரு சொன்ன அதுலாம் இருக்கு அவனுங்க வேல அப்படி அதான் பேச மாற்றானுங்க

அடிபோடி ஒரு வருஷமாவா வேலையில பிசியா இருக்கானுங்களா இப்போ இருக்குற பசங்களுக்குலாம் கல்யாணம் முடிக்குர வரைக்கும் பெத்தவங்க கூட இருந்தா போதும் அதுக்கு மேல வேணாம்

ரெண்டு நாளுக்கு முன்னாடி குஜராத்ல அம்மாவ நாலாவது மாடியில இருந்து கீழ தள்ளிவிட்டுடானாம் ஒரு மகன் அந்த மாதிரி அவனுங்களுக்கு பாரம் இல்லாம இருக்கோமே அதுவே நாம பண்ண புண்ணியம்

நான் இருக்குறதால பரவால்லை உன்ன பாத்துக்குறேன் நானும் இல்லனா என்ன ஆவறது என முத்து விளையாட்டாய் சொன்னார் நானும் உங்க கூடவே வந்துடுறேன் கவலை படாதீங்க என சொன்னதும் முத்துவிற்கு மனதை உலுக்கியது

கோவிலைவிட்டு வெளியே வந்ததும் அருகே தலைப்பாகட்டி ஹோட்டல் இருந்தது ஏ வள்ளி இந்த ஹோட்டலுக்கு போவோமா நீ இங்கலாம் போனதே இல்லை தான . ஆமா நீங்க மட்டும் டெய்லி போறீங்க போல என சொன்னதும் சிரித்தார் முத்து . சரி வா உள்ள போலாம் கட்டாய படுத்தினார் முத்து . ஏங்க வேணா இங்க எல்லாம் அதிகமா இருக்கும் வேணாங்க வாங்க வீட்டுக்கு போகலாம் . அட இவ ஒருத்தி எப்போபாரு பணம் பணம் னு வா நான் பாத்துக்குரன் என சொல்லி உள்ளே அழைத்து சென்றார் முத்து.

பரபரப்பாக இருந்தது ஹோட்டல் சர்வர் ஒருவர் இருக்கையை காட்டினார் அங்கு உக்காரும்படி சொன்னார் . கையை கழுவிட்டு உக்காந்தனர் .

அங்கே இருந்த மெனு கார்டை பார்த்தார் முத்து . ஏங்க அதுல என்ன போட்டு இருக்கு என கேட்டால் வள்ளி. முத்து ஏழாவது வரை படித்தவர் கொஞ்சம் எழுத்து கூட்டி படிக்க தெரியும்

படித்துவிட்டு உனக்கு என்ன வேணும் என வள்ளியை பார்த்து கேட்டார் எனக்கு ஏதும் வேணாம் நீங்க சாப்பிடுங்க என வள்ளி சொன்னதும் நான் சாப்பிடுரதுக்கா உன்ன கூட்டினு வந்தன் அதற்குள் சர்வர் வந்து கேட்டார் ஒரு சிக்கன் பிரியாணி கொடுங்க தம்பி .

என்னங்க என்ன பிரியாணிலாம்

அதுலாம் ஒன்னும் வேணாம் வாங்க போகலாம் என வள்ளி கோபமானாள் .

வள்ளி ஒழுங்கா நான் சொல்றத கேலு என சொல்லிவிட்டு உக்கார வைத்தார் . சர்வர் எடுத்து வந்து கொடுத்தார் . சாப்பிடு வள்ளி என அவள் பக்கம் நீட்டினார்

நீங்க சாப்பிடுங்க சொல்லி அவர் பக்கம் நீட்டினாள் வள்ளி . சிறிது நேரம் கழித்து ஒப்பந்தம் ஒன்று நிறைவேற்றபட்டது

ஏங்க நீங்க பாதி சாப்பிடுங்க அப்புறம் நான் சாப்பிடுறன் என சொல்லி முடிவுக்கு வந்தனர் .

முத்து கொஞ்சம் மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை வள்ளியிடம் நீட்டினார் .

அவ்வுலோதான போதுமா ஒழுங்கா இன்னும் சாப்பிடுங்க எனக்கு கொஞ்சமா கொடுங்க போதும் கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி தான் ஜுஸ் குடிச்சோம் என சொல்லி இன்னும் கொஞ்சம் சாப்பிட வைத்தாள்

முத்துவும் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மீதியை வள்ளியிடம் கொடுத்தார் . சாப்பிட்டுவிட்டு முடித்ததும் சர்வர் வந்து பில் கொடுத்தார் சர்வரை பார்த்து தம்பி எங்க காசு கொடுக்கணும் .

ஐயா என்கிட்டே கொடுங்க நான் கொடுத்டுடுவன் என சொன்னதும் காசை கொடுத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர்

காசு கொடுத்ததை பார்த்த வள்ளி எதையும் கேட்காமல் அமைதியாக வந்தாள்

அருகே ஒரு திரைப்படத்தின் போஸ்ட்டர் ஒட்டுப்பட்டு இருந்தது தமிழ் சினிமாவின் செல்ல ராசாத்தி –விகடன் என வாக்கியம் கொடுத்து கீழே அருவி என பெயர் இருந்தது

அதை பார்த்த முத்துராமன் அந்த படத்திற்கு அழைத்து சென்றார் . வள்ளி மனதிற்குள்ஏன் இவரு இந்த மாதிரி நடந்துகுறாரு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்படி என்ன எல்லா எடத்துக்கும் கூப்பிட்டு போறாரு என நினைத்துக்கொண்டாள்

படத்தில் வரும் அருவின் குழந்தை பருவம் தங்களது குழந்தைகளை பார்த்துகொண்ட நினைவுகளை இட்டு சென்றது

படத்தின் நடுவே முத்துவை பார்த்து ஏங்க டிவி ல ஓடுறதுலாம் இப்படி தான் எடுப்பாங்களா என கேட்டாள் அப்படிதான் போல என முத்து பதிலளித்தார்

அவர்களின் இருக்கை வரிசையில் ஒரு காதல் ஜோடிகள் கார்னர் சீட்டில் உக்காந்துகொண்டு கொஞ்சிக்கொண்டு இருந்தனர் அதனை பார்த்த வள்ளி சிரித்துக்கொண்டாள்

முத்து வள்ளியை பார்த்து நாம கடைசியா எப்போ படம் பாத்தோம் ஞாபகம் இருக்கா
அதற்கு வள்ளி ம்ம் இருக்கே கல்யாணம் ஆனா புதுசுல பதினாறு வயதினிலே போனோமே அதான் கடைசி என்றாள் வள்ளி

பாரேன் எல்லாம் ஞாபகம் இருக்கு உனக்கு என முத்து சொல்லி விட்டு மீண்டும் படத்தை பார்த்தார் அதில் அருவிக்கு எயிட்ஸ் இறந்து போகும் தருவாயில் இருப்பதை பார்த்து மனம் வேதனை அடைந்தார்

அருவி இறந்துவிடுவாலோ என்ற எண்ணம் அவருக்குள் மனதை போட்டு உலுக்கியது கடைசியில் அவள் இறப்பதை காட்டாமல் படம் முடிந்துவிடும் சிறிது மன திருப்தியுடன் வெளியே வந்தனர் ஒருவேளை அருவி பாத்திரம் இறப்பதை திரையில் காட்டி இருந்தால் அவரது மனநிலை முற்றிலும் மாறி இருக்கும் .

மாலை ஆறு மணி பேருந்து நிலையத்தை அடைந்தனர் அங்கே மூன்று முழம் மல்லிகை பூவை வாங்கி தனது பைக்குள் வைத்துக்கொண்டார் முத்து இது வள்ளிக்கு தெரியாமல் நடந்தது .

வீட்டிற்கும் வந்து சேர்ந்தனர் ஓட்டுவீடு இருட்டாக இருந்தது கதவை திறந்து லைட்டை போட்டார் முத்து மயக்கமாக இருக்கு என பாயை போட்டு படுத்துவிட்டார் சிறிது நேரத்தில் வள்ளி மூன்று தோசைகளை ஊத்தி எடுத்து வந்து முத்துவிடம் கொடுத்தாள் . ஏங்க இன்னைக்கு இவ்வுலோ செலவு பண்ணிங்க தேவையா இதுலாம் அந்த காசுக்கு வீட்டுக்கு வந்த நல்லதா சாப்டு இருக்கலாம்

தெனமும் தான் சாப்பிடுறோம் வாழ்க்கையில ஒரு தடவயாச்சும் உன்ன அங்கலாம் கூட்டினு போகணும் னு நினைச்சன்

அதான் டி கூட்டினு போனான்

என்னது டி ஆ ஆச்சர்யமா இருக்கு இப்படிலாம் உங்களுக்கு கூப்பிட தெரியுமா
சிரித்தார் முத்து .

சிரித்துவிட்டு ஆமாடி கூப்பிடுவன்
ம்ம்ம்ம் நல்லா கூப்பிடுங்க

மொதல்ல சாப்பிடுங்க என்று தோசையை கொடுத்தால் வள்ளி

ஒரு தோசை சாப்பிட்டுவிட்டு மீதியை வள்ளியிடம் போதும் என கொடுத்தார் .

யோவ் ஒழுங்கா சாப்பிடுயா சும்மா எப்போ பாரு சின்ன புள்ளமாதிரி

அதட்டியபிறகு சிரித்துக்கொண்டே மற்றொரு தோசை சாப்பிட்டார் முத்து . சாப்பிட்டுவிட்டு மீதி இருந்ததை வள்ளி சாப்பிட்டாள்

சிறிதுநேரம் கழித்து வள்ளியை கூப்பிட்டார் முத்துராமன். அருகில் வந்து அமர்ந்தாள் வள்ளி

வள்ளி கண்ணா மூடு என சொல்லி பையில் இருந்த மல்லிகை பூவை வள்ளியின் தலையில் வைத்தார்.

இருவரும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தனர் . வள்ளியின் மடியில் முத்து தலை சாய்த்து படுத்துக்கொண்டார்

வள்ளிக்கு முத்து செய்தையெல்லாம் பார்த்து சந்தேகமாக இருந்தது . ஏங்க நான் ஒன்னு கேப்பன் உண்மைய சொல்லணும்

காலையில் டாக்டர் கிட்ட போனதுல இருந்து நீங்க பண்றதுலாம் எனக்கு சரியா படல என்ன சொன்னாரு டாக்டர் என்ன செக் பண்ணிட்டு

ஹே அதுலாம் ஒன்னும் இல்லடி உனக்கு ஒன்னும் ஆகாது உனக்கு உடம்புல சத்து இல்லன்னு சொன்னாரு அவ்வுளோ தான் என சொன்னார் முத்து இரவு வள்ளி மடியிலே படுத்துக்கொண்டார் .

இரவு ஜுஸ் கடையை மூடும் சமயம் அருகில் ஒரு பை இருந்தது அதனை என்ன என்று பார்ப்பதுக்காக தன் வீட்டிற்கு எடுத்து வந்தார் கடையின் ஓனர் தன் மகளிடம் என்ன இது என கேட்டார் அதற்கு இலக்கியா மெடிக்கல் ரிப்போர்ட் பா

கடையில யாரோ விட்டுட்டு போய்டாங்க அதான் எடுத்து வந்தான்

அப்பா மதியம் நான் கடையில் இருக்கும் போது ரெண்டு வயசானவங்க வந்தாங்க அவங்களோடது பா

அவங்க அட்ரஸ் இருக்கு நாளைக்கு நான் எடுத்துட்டு போய் கொடுக்குறன் என சொல்லினாள் இலக்கியா

மறுநாள் காலை விடிந்தது

காலையில் மெடிக்கல் ரிப்போர்டை எடுத்துக்கொண்டு அவர்களது வீட்டிற்கு சென்றாள் இலக்கியா

கதவை திறந்து பார்த்தாள்

ஒரு நொடி அதிர்ந்து போனாள்

மருத்துவ அறிக்கையை வேகவேகமாக படித்து பார்த்தாள் இலக்கியா



அதில்















பெயர் : முத்துராமலிங்கம்
நோய் : கேன்சர்
நிலை : இறுதி நிலை

என இருந்தது

அருகில் இருந்த வீட்டில் சென்று சொன்னாள் இலக்கியா

அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று
மகன்களுக்கு செய்தி அனுப்பப்பட்டது

ஒரு நாளில் மகளானாள் இலக்கியா இறுதி சடங்கில் தன் குடும்பத்துடன் இருந்துவிட்டு வந்தாள்


இரவு தூங்கும் முன் உதித்த சிறிய கரு வை இன்று கதையாக்கினேன்

எழுதியவர் : அஷ்வின் தணிகை வேல் (9-Jan-18, 2:42 pm)
பார்வை : 376

மேலே