இன்னும் என்ன செய்யப் போகிறாய்

புருவங்கள் உயர்ந்திடாது
உன் புன்னகை காணாமல்
இமை இரண்டும் கலந்திடாது
உன் அழகை பாராமல்

கார் குழலில் தேன் கலந்து
கன்னத்தில் முத்தமிட
ஓரமாக வீசும் பார்வை
யாரைத்தான் கொன்று விட

விழி இரண்டு போதாதே....?
விழித்தேன்!
ரசிக்க எத்தனை விழிகள் வேண்டுமென்று.

நிலப்பரப்பாய் நீ விழுந்தாய்
உனை சூழ்ந்து கடலானேன்.
வந்து வந்து மோதிச்செல்கின்றேன்
காதல் இன்னும் தொடர்கிறது.
மறுக்காமல் அனுமதிக்கிறாய்
உன் ஆசை எனக்கும் புரிகிறது.
ஒரு நாள் ஒன்றாய் இணைவோம்
அதுவரை நம் காதல் கடற்கரையாய் நீளட்டும்

எழுதியவர் : பழ.முத்துக்குமார் (11-Jan-18, 1:56 pm)
பார்வை : 265

மேலே