வா பறக்கலாம்
நெஞ்சமெல்லாம் பரவசமாய்
பறந்து கொண்டே செல்லுதடி!
அதை நில்! என்று கூறியும்
நிற்க மறுக்குதடி!
வானி லூறும் பறவை யெலாம்
எனைக் காணுதடி!
இவன் சிறகின்றி எப்படி பறக்கிறான்
என்று தங்களிடையே பேசுதடி!
வானமும் முகிலும் இசைக்குதடி என்னை
பாடச்சொல்லி இவைத் தூண்டுதடி!
கானகமும் மலைகளும் வாய்
திறந்து பார்க்குதடி-இதைக்
கண்டு களித்திட மேல்நோக்கி
பறந் திடதுடிக்கு தடி!
மலர்களெல்லாம் நறுமனம் வீசுதடி-உன்னைத்
தூக்கி வரச்சொல்லி என்னைக் கெஞ்சுதடி!