யப்பாடா எப்படியும் வந்தாச்சு
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
இரவலுக்கு குரல் வாங்கி
இளம்படைய இயக்கவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
வயது பல்கலையில்
முதுநிலை முடித்து
முழுநேரமிலா அரசியலுக்கேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
வருசம் பல சொல்லி சொல்லி
புருசன்மாரா ரசிகரெலாம் ஆனபின்னும்
பொய்யே சொல்லாத பெயருக்கேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
இமயமல சோலையில
இதயம் வச்சு காளைகள
உதயம் செய்யவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
மண்ணு தொடாம கண்ணு மூடி
மண்ணு விட்டு விண்ணு தாண்ட
ஆன்மிகத்த அரசியலா ஆக்கவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
ரசிச்சவன் எல்லாம் விசிலடிக்க
துடிச்சவன் எல்லாம் தொண்டனாக
மடிச்சவன கூட மன்றத்துல ஆக்கவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
கூட்டுறவுக்கடையில அரிசி இல்ல
காரணம் காவிரிதான் அதுக்கு புள்ள
பிராணயாம நோன்பிருந்து
கைவிரிச்ச காவிரிய
குடம்பிடிச்சி கொண்டுதரவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
போர்வரும் போது பார்த்துக் கொள்ள
ராஜபட்சே மகன் வாழ்த்து சொல்ல
குற்றத்து போர் முள்ளி போல இன்றி
குற்றமில்லா போரிட்டுமாளும் தமிழருடல் காக்கவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
இளமைதிரண்டு இனம்மிரண்டு இயற்றிட்ட சல்லிகட்ட
காளைதிரண்டு சாதுமிரண்டு சங்கடத்தில் சாய்க்குதென
தடையிட்டு விளையாட்டு ஆன்மிகத்து குற்றமென்பதற்கேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
தமிழு கொண்டு தழைக்கிற கூட்டம்
திமிரு கொண்டு உழைக்கிற கூட்டம்
உலகு சுற்றி வாழுற கூட்டம்
தவிடு பொடியா ஆக்கி அழிக்கவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
கண்டபடி தமிழ் வெளிபேசி
கொண்டமொழி உள்பேசி
இட்டவிதி கொண்டபடி ஆன்மிகம் பேசி
இனம் மறந்த இந்தியரென்றே இனமாற்றவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
சினத்துடனே எதிர்க்கின்ற
சீமான்ய தம்பிகள
சீண்டாமல் தலைவனையே
சீனிஎறும்பா குறை சொல்லி பிரிக்கவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
வர இருக்கிற வறுமையில
தர இருக்கிற பணத்திறமையில
விட இருக்கிற வாக்கயெல்லாம்
இட வைக்கிற பயிற்சிக்கேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
ஆபத்து ஆனத எல்லாம்
எதிர்த்து தமிழன் விட்டத எல்லாம்
வளர்ச்சி வளர்ச்சி தேன்மொழி பேசி
வளத்த ஒழித்து வளப்படுத்தவேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
பசித்தவன் உண்ணும் பசித்தவன
ரசிப்பவன் கண்ணும் களிப்பாற
கலிகாலமும் இன்றே தொடங்கியது
இளிவாயர் நாட்டை காலன் ஆழ்வதற்கேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு
இன்னொரு இனத்திற்கு தலைவனாகி நாடாள
கொண்ட கொள்கையில வந்த தலை சுத்தும்
கொஞ்சம் கூட தீரல
இன அனாதைகள ஆழ வைத்த தமிழன்
தல எழுத்தும் இன்னும் மாறாம இருப்பதற்கேனும்
யப்பாடா எப்படியும் வந்தாச்சு