தகவல் இளமை கால பொங்கல்

காவேரி கரை புரண்டு ஓடும் நதியோரத்தில்,பசுமையான வயல் வேலிகள் கொண்ட அருமையான கிராமத்தின் நடுவில் எங்கள் வீட்டில் அழகிய கோலம் இட்ட முற்றம் ஒன்றில் கிழக்கு நோக்கியபடி ,பசும் சாணத்தால் மொழுகி , அவரை இல்லை சாற்றால் தேய்த்து ,மாக்கோலம் இடப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட அற்புதமான மாடங்களில் விநாயகருக்கு,குலதெய்வத்துக்கு,சூரியனாருக்கு,சுமங்கலிக்கு,(பெண் வீட்டார் பெண்களுக்கு கொடுக்கும் வெள்ளி விளக்கு ) சுற்றத்தார் நலனுக்கு என்று விளக்குகள் ஏற்ற படும்
இருபக்கங்களிலும் மஞ்சள்கொத்து,இஞ்சிகொத்து, கரும்பு வைக்கப்படும்.
பசும் சாணத்தால் விநாயகரை பிரதிஷ்ட்டைசெய்து மஞ்சள் குங்குமம், பூக்கள் சாற்ற படும்.
வாழை இலையில் வெற்றிலை,பாக்கு பழங்கள்,தேங்காய் உடைத்து
நிவேதனம் ,கற்பூரம் ஏற்றி பொங்கலோ,பொங்கல் என வழிபாடு தொடங்கும்.
மேற்கு நோக்கிய படி திருநீறு பூசி,,மஞ்சள்,குங்குமம் பொட்டு இட்டு , கழுத்தில் மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட புத்தம் புதிய பானைகளில் பாலும், அரிசி களைந்த நீரும் சேர்த்து, மண் அடுப்புகளின் மேல், ஏற்றப்பட்டு, அக்கினியாரை ஏற்றி பொங்கி வரும் சமயத்தில் நாங்கள் அனைவரும் சுற்றிருந்து பொங்கலோ பொங்கல் என உரக்க போட்டி போட்டு கொண்டு கூவி மகிழ்வோம் .

வாழை இலையில் படசல்கள் போட்டு ,7 காய்கள் சேர்த்து செய்த பொரியலும் வைக்கப்பட்டு நிவேதனம் செய்யபடும் மீண்டும் பொங்கலோ பொங்கல் ........................................ வாழ்த்துக்கள் ...............

எழுதியவர் : மங்களம் நீரஜா சத்தியநாரா (13-Jan-18, 4:22 am)
சேர்த்தது : MURUGAN
பார்வை : 442
மேலே