மண்ணில் வந்த நிலவே

செண்பகப்பூ மலர்ந்தி ருப்ப தைப்போல்
..... சிரித்தென்னை மயக்கும் மழலை நீயே
மண்ணுலகில் வந்த நிலவைப் போல
..... மனமெங்கும் இன்பம் நிறைத்தாய் நீயே

சோகங்கள் எல்லாம் மறையும் நீயென்
..... தோள்மீது சாய்ந்து ஊஞ்ச லாட
மேகங்கள் சிந்தும் மாம ழைப்போல்
..... முத்தமழை பொழிவாய் என்றும் அன்பே

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:38 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 352

மேலே