வள்ளலார்

கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக .
இது குரல்
இந்தக் குறளை கற்காமலேயே
விளக்கமளித்தது இவன் குரல்
அனைவரின் தலையிலும் கருப்பு தெரிய
இவன் தலையில் மட்டும் நெருப்பு தெரிந்தது
நமக்கெல்லாம் ஞான மதியைப்
படைத்த இறைவன்
இவனுக்கு மட்டும் அந்த
வான மதியைப் படைத்தான்
அனைவரும் பள்ளிக்குச் சென்று கற்கையில்
இவன் மட்டும் கொள்ளிக்குச் சென்று கற்பித்தான்
நம் விவசாயிகள் எப்பொழுதும்
வள்ளலாராகவே வாழ்கின்றான்
வாடிய பயிரைக்கண்டு
இவன் சன்மார்க்க வழியை நாடியவன்
தன் மார்க்க வழியைச் சாடியவன்
இவன் அனைவருக்கும்
கொடுத்த பூ அன்பு
இவன் கட்டவேண்டும் என்றது வெள்ளாடை
இவன் வெட்டவேண்டாம் என்றது வெள்ளாட்டை
இவனால் உண்டான ஜோதியில்
ஜாதி இருள் அகன்றது
ஜோதி அருள் அகண்டது