சிங்காரவேலர்

கடலோரம் பிறக்கும்
மீனவனின் உடல்
இவர் மீனவாய்ப்
பிறந்த கடல்

இவர் கடற்கரையில்
பிறந்தாலும் இவர் மனம் கரை பட்டதில்லை

மாமழை பொழியும் வானம்
இவர் நடந்தால் பூமழை பொழியும்
பூமழை பொழியும் வானம்
இவர் கேட்டால் பா மழை பொழியும்
அது இவர் பெட்ரா ஞானம்

இவர் முதன்முதலில் சங்கம்
வளர்த்தச் சிங்கம்

சிங்காரத்தின் மதி காரம்தான்
குறைத்து வெள்ளையனின் அதிகாரத்தை

இவர் வள்ளிக்குப்
பிறந்த விடி வெள்ளி

இவர் சட்டம் பயின்று
பொய்பேசாது தன் சட்டையை எரித்தப் பட்டம்

பாரதியின் உயிர் பிரிந்தது
மண் அடியில் அல்ல
இவர் போன் மடியில்

இவர் தோழா எனும்
வார்தையைக் கண்டுபிடித்த சேகுவேரா
இப்போது இவர் இருந்திருந்தால்
தொழிலாளி எங்கள் வாழ்க்கை
ஆகிவிட்டது பாழா என்று மானம் நோகுவாரா ?

இவர் தான் செங்கோட்டையில் தேசியக்கொடி
பறக்கக் காரணம்
இவன் அதற்காக அடைந்ததோ மாரணம்

அனைவரும் பூக்களை நேசித்துக்கொண்டிருக்க
இவர் மக்களை பற்றி யோசித்துக்கொண்டிருந்தார்

காலையில் மட்டும் நீராடினார்
மற்ற நேரமெல்லாம் சுதந்திரம் பெறப் போராடினார்

இவர் உதிரம் உதிர்ந்துதான்
சுதந்திரம் பூத்தது

இவர் அணிந்த கருப்பு ஆடை
விரட்டியடித்தது இங்கிலாந்து கருப்பு ஆட்டை

இவர் சுதந்திரம்
பெற்றுத் தந்த சுந்தரன்

இந்தியப் பெருங்கடலாய்
இவர் புகழ் நீண்டிருக்கட்டும்
இவுலகை ஆண்டிருக்கட்டும்
அன்புடன்
புதுவைக் குமார்
31 யமுனை வீதி
வசந்தம் நகர்
புதுவை -605110
9942994112

எழுதியவர் : குமார் (15-Jan-18, 12:41 pm)
பார்வை : 206

மேலே