வஞ்சகம் அழிக்க வஞ்சகம் கொண்டேன்
அன்பென்ற வேதம் அனைவருக்கும் போதுவாம்,
வம்பிழுப்பார் கூறுவார் அன்பு என் மதத்திற்கே உரியதென்று..
நயவஞ்சகமாய் சூழ்ச்சி பேசி உலக மக்களின் அமைதியான வாழ்க்கையைக் கெடுக்கும் நாக்கை வெட்டி எறிவது உலகின் மீது பீறிடும் அன்பின் வெளிப்பாடாம்...
வஞ்சகனைத் தண்டித்து நானும் வஞ்சகனாகப் பெரின் அருட்பெருஞ்சோதியே!
என்னை ஆட்கொண்டருள்வாயே!