வேண்டும் விடுலை
காலையில்
கரும்பாய் இருந்த அவளை....
வீட்டு வேலைகளும்
குழந்தைகளும்
பேருந்து நெரிசல்களும்
அலுவலக வேலைகளும்
கடித்துப் துப்பியதில்
'சக்கையாய்'ப்
படுக்கையில் விழுந்தால் இரவில்...
விழுந்தவள் மீது
'எறும்பாய்' ஊறினான்
கணவன்....!

