நிலா காய்தல்
அந்த
நிலா காய்தலின்
சுகம் வேரேதிலேயும்
கிடைப்பதில்லை
நெருப்பற்ற தனலில்
நேசத்தோடு
காய்ந்திருப்பது
என்றும்
இனிமையானது,
நட்சத்திரங்களாகிய
மின்மினி
பூச்சிகளின்
தோரணங்களின்
ரீங்காரத்துடன்,
காதல் வசனங்களில்
இலயித்த ஞாபகங்கள்
நெஞ்சில் அழியா
சுவடுகளாய்
உயிரிருக்கும்வரை,
உயிர்போனாலும்
கரைகளில் ஒலித்து
கொண்டிருக்கும்
நம் நேசத்தின்
வசனங்கள்.