வா கண்மணி
ஏர்ப்பூட்டிய மாடுகளின் வாய் திறப்போம் வா கண்மணி
காலமெனும் கைதியின் கைவிலங்கு அவிழ்ப்போம் வா கண்மணி
ஏற்றம் எனும் புது ஏற்பாடு எழுதுவோம் வா கண்மணி
ஏழை எனும் சொல்லை எரித்திடுவோம் வா கண்மணி
புகழ்வும் நிகழ்வும் புரிய வைப்போம் வா கண்மணி
மாளிகையில் சொர்கம் இல்லை நிரூபிப்போம் வா கண்மணி
தவிக்கவிட்டால் தலைவனில்லை என உரைத்திடுவோம் வா கண்மணி
சுற்றும் இடமெல்லாம் சொந்தம் என்போம் வா கண்மணி
பாரதமும் இதுவன்றோ பார்புகழ காட்டுவோம் வா கண்மணி
ஏமாற்றம் தான் தலைமையெனில் ஏமாற்ற தயாராகுவோம் வா கண்மணி