பா சபரி நாதன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பா சபரி நாதன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  23-Mar-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2017
பார்த்தவர்கள்:  273
புள்ளி:  17

என் படைப்புகள்
பா சபரி நாதன் செய்திகள்
பா சபரி நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2019 4:37 pm

நமக்கு பசித்தால்-
நாம் குரைத்தால்
புறை எறிந்திடுவர்!!
அதை பிடித்தால்-
வாயால் அணைத்தால்
இதை நிதம் செய்திடுவர்!!
பலனாய் முறைத்தால்-
அவரிடம் விளித்தால்
கூண்டினில் அடைத்திடுவர்!!
அவர் கால் பிடித்தால்-
கயமை மறந்தால்
கையது அசைத்திடுவர்!!
வாசல் திறந்தால்-
அந்நாள் வந்தால்
நம் காலில் விழுந்திடுவர்!!
புறையும் தந்தால்-
காலில் விழுந்தால்
மீண்டும் செயித்திடுவர்...

மேலும்

பா சபரி நாதன் - பா சபரி நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Apr-2018 5:32 pm

சூடிய பூக்களுக்கும் வாசம் சேரும்
பூத்திருக்கும் பூவின் கூந்தல் வசம் சேர 
குங்குமம் வெட்கி சிவந்து போகும்
குங்குமச்சிமிழ் அவள் விரலுக்கு முத்தமிட
இனிய நாளும் இனிப்பாய் இனிக்கும்
இனியவள் குரல் இசையாய் பாய்ந்திட
அவள் பிறப்பின் உன்னதம் போற்றலாம்
அழகின் அகரம் அவள்முன் மண்டியிட

மேலும்

ஒருவர் வெட்கம் கொள்ளும்போது அவர் கன்னங்கள் சிவக்கும். அதுபோல குங்குமம் ஏற்கனவே சிவந்து இருப்பினும் அவள் விரல்களால் தொடும் போது அந்த தீண்டலில் மேலும் சிவக்கும் என குறிப்பிட வந்தேன். 16-Apr-2018 12:13 pm
குங்குமம் ஏன் சிவக்க வேண்டும்...எப்படி சிவக்கும்? 13-Apr-2018 6:39 pm
பா சபரி நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2018 5:32 pm

சூடிய பூக்களுக்கும் வாசம் சேரும்
பூத்திருக்கும் பூவின் கூந்தல் வசம் சேர 
குங்குமம் வெட்கி சிவந்து போகும்
குங்குமச்சிமிழ் அவள் விரலுக்கு முத்தமிட
இனிய நாளும் இனிப்பாய் இனிக்கும்
இனியவள் குரல் இசையாய் பாய்ந்திட
அவள் பிறப்பின் உன்னதம் போற்றலாம்
அழகின் அகரம் அவள்முன் மண்டியிட

மேலும்

ஒருவர் வெட்கம் கொள்ளும்போது அவர் கன்னங்கள் சிவக்கும். அதுபோல குங்குமம் ஏற்கனவே சிவந்து இருப்பினும் அவள் விரல்களால் தொடும் போது அந்த தீண்டலில் மேலும் சிவக்கும் என குறிப்பிட வந்தேன். 16-Apr-2018 12:13 pm
குங்குமம் ஏன் சிவக்க வேண்டும்...எப்படி சிவக்கும்? 13-Apr-2018 6:39 pm
பா சபரி நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2018 5:31 pm

தாய்மடி காணா கண்களும்

தாய்மண் தொட துயிலும் 

தன் வீரியம் அறியா மாந்தரும்

தமிழனென சொல்லி முழங்கும்

போற்றினும் தூற்றினும் தாக்கினும் 

துவளாது இயங்கிட இயலும்

இன்னது நல்லது கண்டும்

இணையின்றி அமையாது நம் தமிழும்....

இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

மேலும்

பா சபரி நாதன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2018 7:08 pm

உன் விழிதிறந்த கணம் கண்டேன் ஒருநாள்
என்விழி அசைவும் நின்ற திருநாள்
நாணிகொண்டு போர்வையில் நீ மறைய
நாதன் என்னிதழில் புன்னகை குவிய
திரைவிலக்கி முகம்காண மனம் நினைக்க
மறைப்பை தாண்டி மங்கை முகம் தான்சிவக்க
அழுத்திவிரல் பிடித்து உலகமென சொல்லத்தோன
அணையா விளக்கே உன் விழியென சொல்லிப்போனேன்

மேலும்

பா சபரி நாதன் - பா சபரி நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jan-2018 6:43 pm

ஏர்ப்பூட்டிய மாடுகளின் வாய் திறப்போம் வா கண்மணி
காலமெனும் கைதியின் கைவிலங்கு அவிழ்ப்போம் வா கண்மணி 
ஏற்றம் எனும் புது ஏற்பாடு எழுதுவோம் வா கண்மணி
ஏழை எனும் சொல்லை எரித்திடுவோம் வா கண்மணி
புகழ்வும் நிகழ்வும் புரிய வைப்போம் வா கண்மணி 
மாளிகையில் சொர்கம் இல்லை நிரூபிப்போம் வா கண்மணி
தவிக்கவிட்டால் தலைவனில்லை என உரைத்திடுவோம் வா கண்மணி
சுற்றும் இடமெல்லாம் சொந்தம் என்போம் வா கண்மணி
பாரதமும் இதுவன்றோ பார்புகழ காட்டுவோம் வா கண்மணி 
ஏமாற்றம் தான் தலைமையெனில் ஏமாற்ற தயாராகுவோம் வா கண்மணி 

மேலும்

நன்றிகள் பல அன்பரே.. 23-Jan-2018 7:08 pm
காலத்தின் நிர்ப்பந்தம் வாழ்க்கையின் பாதையையும் மாற்றி அமைத்துவிடுகின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jan-2018 8:29 pm
பா சபரி நாதன் - பா சபரி நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jan-2018 12:56 pm

என் இதழ் சொல்லத்துடிக்கும் பெயர் நீதான்
இதழ் குவித்து என்பெயர் சொல்பவளும் நீதான் 
நிலவை வெறுக்க காரணமும் நீதான்
என் இரவின்கருமை நிலவும் நீதான்
பாசம் காட்டி பழகியதும் நீதான்
பழகிப்பார்க்க நான் ஆசைப்பட்டவள் நீதான்
என்னை தெரியும் சொன்னதும் நீதான்
என்மனம் தெளிய செய்ததும் நீதான்

மேலும்

நன்றிகள் பல.... 22-Jan-2018 6:39 pm
என்னையும் வாழ்க்கையை பற்றி சிந்திக்க வைத்தது புன்னகை தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 07-Jan-2018 12:58 pm
பா சபரி நாதன் - பா சபரி நாதன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 12:22 pm

குயிலிறகு நிறம் தானே
மயில் கழுத்துக்காரி நீனே
நிலவை தேய்த்து வருவேனே
நிந்தன் முகத்தில் இடுவேனே
சொக்கும் அழகு என்பேனே
எந்தன் அழகி இவள்தானே
கிளியோபாட்ரா தோற்பளே
கீச்சும்க்கிளி முன்னாலே...

மேலும்

நன்றிகள் பல அன்பரே... 07-Jan-2018 12:56 pm
அழகு என்பது செயலில் தான் இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 12:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே