தேர்தல்

நமக்கு பசித்தால்-
நாம் குரைத்தால்
புறை எறிந்திடுவர்!!
அதை பிடித்தால்-
வாயால் அணைத்தால்
இதை நிதம் செய்திடுவர்!!
பலனாய் முறைத்தால்-
அவரிடம் விளித்தால்
கூண்டினில் அடைத்திடுவர்!!
அவர் கால் பிடித்தால்-
கயமை மறந்தால்
கையது அசைத்திடுவர்!!
வாசல் திறந்தால்-
அந்நாள் வந்தால்
நம் காலில் விழுந்திடுவர்!!
புறையும் தந்தால்-
காலில் விழுந்தால்
மீண்டும் செயித்திடுவர்...

எழுதியவர் : பா சபரி நாதன் (28-May-19, 4:37 pm)
சேர்த்தது : பா சபரி நாதன்
பார்வை : 1377

மேலே