கோயில் சிலை

சின்ன கோயில்
சிறிய கருவறை
கருவறைக்குள் இடது பாதம்
தூக்கி ஊழி நடனம் ஆடும்
நடராஜனின் பஞ்சலோக சிலை
உள்ளூர் மக்களுக்கு 'அவன்'
vendum வரமளிக்கும் ஈசன் சர்வேசன்
எப்படியோ அந்த சிலையைத் திருட
வந்தான் ஒருவன் ………… நடு நிசி
கர்பகிரகத்தின் உள்ளே அவன்
சிலையை கைகளால் தொட்டு
தூக்கப் பார்க்க தூக்க முடியவில்லை
chinnachilaiyai …. உடம்பெல்லாம்
மின்சாரம் பாய்ந்தது போன்ற உணர்வு
மூர்ச்சையாகிறான் ……….
உதயமானது, பூஜாரி கோயில் கதவு திறக்க
உள்ளே அவன் , மண்டி இட்டு அழுத நிலையில்
இரவில் நடந்தது அத்தனையும் அப்படியே
பூஜாரியிடம் சொல்லி தான் வந்த நோக்கமும்
சொல்ல அவ்வளவில் குழுமிய பக்தர்கள்
நடந்ததை அறிந்து ''''''...…………………
'நமச்சி சிவாய ' கோஷம் எழுப்ப
ஒன்று புரிந்தது, இந்த யுகத்திலும்
சாந்நித்தியம் பெற்ற சிலைகள்
பல கோயில்களில் உண்டு , அவை
சிலை அல்ல உயிர்கொண்ட தெய்வங்கள்
சாந்நித்தியம் பக்தர்களின்
ஆத்மார்த்த பூஜையின் பலனே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-May-19, 4:43 pm)
Tanglish : koyil silai
பார்வை : 170

மேலே