தமிழ்ப்புத்தாண்டு
தாய்மடி காணா கண்களும்
தாய்மண் தொட துயிலும்
தன் வீரியம் அறியா மாந்தரும்
தமிழனென சொல்லி முழங்கும்
போற்றினும் தூற்றினும் தாக்கினும்
துவளாது இயங்கிட இயலும்
இன்னது நல்லது கண்டும்
இணையின்றி அமையாது நம் தமிழும்....
இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....