அரசியல் அடிமைதனத்தை அடியோடுஅழித்திடுவோம்

முட்டாள்கள் வாழும்,
முட்டாள்கள் ஆளும் இந்த மண்ணிலே
நாமும் ஒரு முட்டாளாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இந்த மூளையிழந்த அரசியல்வாதிகளையும்,
முதுகெலும்பிழந்த அரசு அதிகாரிகளையும் பற்றிப் பேசிக்கிடப்பதை விடுத்து,
நம் முட்டாள்தனத்திற்கு முதலில் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
முட்டாள்கள் என்று தெரிந்தும் முதலுரிமை அவர்களுக்கே வழங்கும் மூடத்தனத்தை மூட்டைகட்டவேண்டும்.

முயன்றால் எதுவும் முடியும்,
இருண்டால் கட்டாயம் விடியும்,
நல்ல முடிவுக்காகவும்
நல்ல விடிவுக்காகவும் காத்துகிடக்கின்றோம்.
காலத்தின் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் பூத்துக்கிடக்கின்றோம்.
பதிலை நாம் எழுதப்போகின்றோமா இல்லை
காலம் தன் பதிலை எழுதப்போகின்றதா
என்பதை தெரிவு செய்யும் தருணத்தில் நிற்கின்றோம்.
நல்லதொரு பதிலை எழுதிடுவோம்,
நன்மை தரும் ஆட்சியை அமைத்திடுவோம்,
நாட்டை வளப்படுத்திடுவோம்,
நாமும் வளமுடன் வாழ்ந்திடுவோம்.
தமிழுடனும்,தன்மானத்துடனும் என்றும்
தனிப்பெருமை பெற்று நிலைத்திடுவோம்..

எழுதியவர் : கார்த்திக் கு (13-Apr-18, 5:51 am)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 102

மேலே