அவள் பிறப்பின் உன்னதம் போற்றலாம்

சூடிய பூக்களுக்கும் வாசம் சேரும்
பூத்திருக்கும் பூவின் கூந்தல் வசம் சேர 
குங்குமம் வெட்கி சிவந்து போகும்
குங்குமச்சிமிழ் அவள் விரலுக்கு முத்தமிட
இனிய நாளும் இனிப்பாய் இனிக்கும்
இனியவள் குரல் இசையாய் பாய்ந்திட
அவள் பிறப்பின் உன்னதம் போற்றலாம்
அழகின் அகரம் அவள்முன் மண்டியிட

எழுதியவர் : சபரி நாதன் பா (13-Apr-18, 5:32 pm)
சேர்த்தது : பா சபரி நாதன்
பார்வை : 1211

மேலே