நானொரு கவிஞன்தான்

கத்துக்குட்டியாய் கவிதை
என்ற பெயரில் ஏதேதோ
வரிகளை கிறுக்கிய நாட்களை
நினைத்தால் சிரிப்புதான் வருகிறது
இன்றும் பெரிய கவிஞன் நான்
என்று என்னை நான்
கூறிக்கொள்ள விரும்பவில்லை-ஆனால்
என் உள்ளம் கூறுகிறது
" நீ இப்போது தேறிவிட்டாய்
கவிதை எழுதுவதில் என்று
அந்த ஆத்ம திருப்தி எனக்கு
ஊக்கம் தருகிறது இன்னும் எழுத
தொடர்ந்து சிந்திக்க, எழுத.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Apr-18, 4:14 pm)
பார்வை : 131

சிறந்த கவிதைகள்

மேலே