ஈழ வலி கொண்ட இந்தியா
இது இந்தியா ...
அடையாளக்
குறியீடு இன்றி
அரசியல் வியாதிகளின்
தயவில் வாழும் (வாடும் )
இது இந்தியா ...!!!!???
மக்களுக்காக
மக்களால்
மக்களே நடத்தும்
சனநாயக நாடு இது
நம் தாய் வீடு இது....
பரம்பரைகள்
மறந்து
பாரம்பரியங்கள்
இறந்து
சூன்யமான உலகத்தின்
மானியமாக நிற்கிறது ...
அன்று
போதி மரம்
தேடிய தமிழன்
இன்று
பண மரம் தேடி
முட்டாள் ஆகிறான் ...
மருந்திலும்
மருத்துவரிலும்
மறுக்கப்படும்
மாண்புகள் ...
மனம் பேசுவதில்லை
அங்கு பணம் தான்
பேசுகிறது ....!!
அரசியல்
சாக்கடைக்குள்
மறைக்கப்பட்ட
உண்மைகள்
தரை தாழ்ந்தும்
தலை நிமிரா
தமிழகம் ...!!
மீனவனைத்
தேடாத விமானம்
வீணாக
வண்ணப் பொடியுடன்
வானில் ...!!?
வாழ்க தமிழென்றால்
தீவிரவாதம்
எங்கும் தமிழென்றால்
தேச துரோகம் ...!!
அட போங்கப்பா
சலித்து பூமி ...
விதிமாற்றி
விடியல் பெற
கை கோர்த்து
நடப்போம் ....!!!
விழித்திடு இந்தியா ...!!! எழுந்திடு ....!!!!