தமிழன்டா

ஆதியில் பிறந்த
தமிழன்
இவ்வுலகை ஆட்டிப்படைத்தான்
அமிழ்தம் போன்ற தமிழை
பல நடையில்
அவனோ வளர்த்தான்
வீரம் செறிந்த தமிழன்
விண்ணை கடந்தும்
வளர்ந்தான்
சரித்திரம் பேசும்
வகையில்
சாதனைகளை
புரிந்தான்
புதுமை என்னும்
பெயரில் இன்று
தான் உரிமைகளை
இழந்தான்
தாய் மொழியான தமிழை
கற்க அவனோ மறந்தான்
சாதி என்னும் ஒன்றால்
பல பிரிவாக பிரிந்தான்
உணர்ச்சிமிக்க தமிழா
இந்த பிரிவினையே பொதுமடா
ஒன்று சேர்ந்து வாழடா
நாளை
உலகை ஆளும் தமிழடா.......,!

எழுதியவர் : மு ராம்குமார் (22-Jan-18, 7:30 pm)
பார்வை : 1347

மேலே