புதியஇந்தியா

உயர்ந்த கம்பத்தில்
ஒய்யாரமாய்
நம் தேசியக்கொடி
சிறகை விரித்து பறக்கிறது
மழலைகளின் வாய்கள்யெல்லாம்
இனிப்பு மிட்டாய் மென்றபடி
எச்சில் ஊற ருசிக்கிறது
சுதந்திரப்போராட்டத்தில்
போராடிய தியாகிகளின் உடல்கள் அவற்றை எண்ணி சிலிர்க்கிறது
நம்நாட்டை ஆளும்
அரசியல் கட்சிகளோ
வெறும் கடமைக்கு
நினைவு தினமாய் ஒருநாள் மட்டும் விடுமுறை கொடுக்கிறது
நம் நாடு விடுதலைப் பெற
தன் உயிர்களை மாய்த்தவர்களின் ஆத்மாக்களோ
உள்ளம் குமுறத்துடிக்கிறது
சுதந்திரம் அடைந்தும்இன்னும் நாம் மதங்களிடமும் சாதிகளிடமும் அடிமைகளாய் இருக்கிறோமே என வேதனையோடு உரக்க உரைக்கிறது
வாருங்கள் என் இனிய இந்தியர்களே மிண்டும்மொரு சுதந்திரப்போராட்டம் தொடுப்போம்
மதங்களையும் சாதிகளையும் வீழ்த்தி மனிதம்போற்றும் புதியஇந்தியா படைப்போம் !