வாழ்வெனும் ஆசான்

உளித் தாங்கி அடி வாங்கி
விரிவடையும் கல்
அளவிலா அழகை உள்வாங்கி
சிலையாக மெளிரிட வைத்தது..!

என் உள்ளமும் வாழ்வெனும்
உளித்தாங்கி அடி வாங்கி
அளவிலா அழகை உள்வாங்கி
மெளிரிட வைத்தது.....!

பண்யிலா விளைநிலம் தனை
ஏர் கொண்டு உழலில்
பண்பட்ட விளைநிலம் அதீத
விளைச்சலில் நிறைந்திட....!

பண்பிலாயனை அறிவெனும் எனும்
ஏர் கொண்டு உழ
பண்பட்ட விளைநிலம் ஆக்கி
பண்பில் நிறைந்திட வைத்தது...!

நீர் இரைத்த கேணிப் போல்
வற்ற வற்ற உற்றுயெடித்து
கேணி நிறைத்திடும்
என்னறிவும் வற்ற வற்ற
உற்று எடுத்து அறிவினில்
நிறைந்த கேணியாக்கியது....!

இவையாவுமே எனைச் சிர் செய்து
சிறாலனாக்கியது....!

எழுதியவர் : விஷ்ணு (27-Jan-18, 8:31 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
Tanglish : vazhvenum aasaan
பார்வை : 98

மேலே