யார் இவன்

இவன் கொஞ்சுகிறானா பேசுகிறானா
எனப் பிரித்தறி யலாது?
ஆனால் என் கண்ணங்களை கெஞ்சிடச் செய்திடுவான்!
நஞ்சு புகா இனிய மழழை மொழி கற்றுக் கொடுப்பான்
என்னை மழழையாகவே ஆக்கி விளையாடிடுவான்!
பூக்களோடு பூக்களாகக் கலந்திருப்பான்
அந்த பூக்களுக்கே புன்னகை சிந்தக் கற்றுக் கொடுப்பான்!
தத்தி தத்தி நடந்திடுவான்
கிள்ளை மொழி பேசிடுவான்
வஞ்சமிலா புன்னகையில் என்னை கவர்ந்திடுவான்!
மண்ணைப் பிசைந்து அதை இசைந்து
தன் பிஞ்சு விரல்களிலே செதுக்கிடுவான் மணற் சிற்பங்களை!
இவன் பஞ்சு விரல் பட்டால் உயிரிலா
பொருளெல்லாம் உயிர்த்தெழுந்திடுமே!
பார்ப்ப தெல்லாம் கை நீட்டிடுவான்
வாங்கிதரச் சொல்லி என்னைக் கேட்டிடுவான்!
நான் ரசித்த உலகத்தை பாரடா யென்றால்
அவன் உலகிற்கு என்னை கவர்ந்து சென்றிடுவான்!
இவனைக் கண்டால் என் துன்பமெலாம் பறந்திடுமே
புத்தம் புதிதாய் பிறந்திடுவேனே!
பிறர் இவனைக் கண்டால் வசிய முகத்தில் மயங்கிடுவர்
மரண மில்லா இன்பம் பெற்றிடுவர்!
இவன் என்னைக் கண்டால் காற்றினிலே மிதந்திடுவான் ஆரத்தழுவிடுவான் என் கண்ணங்களில் முத்த மழை பொழிந்திடுவான்!

யார் இவன்?
--என் மகன்/மகள்

எழுதியவர் : ச. செந்தில் குமார் (27-Jan-18, 10:29 am)
பார்வை : 7522

மேலே