உனக்காக மட்டும்

உனக்காக மட்டும்:

உரியவளே,
உன் தேவையில், நான்
உன்னுடையதாவேன்.

நீ,
படிக்கையில் விளக்காவேன்,

இடிக்கையில் உலக்காவேன்,

அளக்கையில் முழமாவேன்,

குளிக்கையில் குளமாவேன்.

உன்,

இறுக்கத்தில் குணமாவேன்,

உறக்கத்தில் கனவாவேன்,

உனை
நோக்கி பயணித்து, என்
நொடிகள் போனது.

அதுபோல்

உம்மை
வருடியே, என்
வருடங்கள்
வத்த வேண்டுமென
விழைகிறேன்..!
***

எழுதியவர் : அகரன் (28-Jan-18, 12:16 am)
பார்வை : 897

சிறந்த கவிதைகள்

மேலே