மரணிக்கும் நீதியும் மறைக்கப்படும் உண்மைகளும்

நினைவிருக்கிறது எனக்கு
கைகளில் விலங்கிட்டு கண்கள் கட்டப்பட்டு
விசாரணை என்று விளக்கம் சாெல்லி
அழைத்துச் செல்லப்பட்ட அந்த நாள்
சுமத்தப்பட்ட பாெய்ச்சாட்சி
மரணத் தீர்ப்பாகியது
விசாரணைகள் ஏதுமின்றி
விலை பாேனது உண்மை

குற்றங்கள் நிரூபிக்கப்படடாலே தண்டனை
குற்றங்கள் சுமத்தப்பட்டே குற்றவாளியாய்
யாராே செய்த குற்றம்
தீர்ப்பு இன்னாெருவனுக்கு

நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதாலா
சில உண்மைகளும் மறைக்கப்படுகிறது
சுதந்திரமாய் உலாவுகிறது அநீதி
சிறையில் சாகிறது சில நீதிகள்

பணத்தை இறைத்து பாவத்தை மறைத்து
அப்பாவி சிலருக்கு அநியாய தீர்ப்பு
கம்பிகள் வழியே ஏங்கிப் பார்க்கிறான் ஏழை
ஏதுமறியாதவன் பாேல் ஏமாற்றிப் பாேகிறது பணம்

களங்கமில்லா கடவுளுக்கே சிலுவைத் தீர்ப்பு
கதறினார் யேசு பிரான் இவர்களை மன்னியும் என்று
உண்மையை உரைக்க முடியாத உயிர் பயத்தில்
ஊமையாகவே சாகிறது உண்மைகளும்

நான்கு சுவர்களுக்குள் நாளும்சாகிறது நல்ல மனிதங்களும்
நம்மை யார் எதிர்ப்பதென்று
ஆணவம் காெண்டு அலைகிறது
மனச்சாடசியற்ற மனித மிருகங்கள்

நிரபராதியின் நியாயமற்ற மரணங்கள்
அநீதியால் ஆமாேதிக்கப்பட்ட தீர்ப்புக்களே
விசாரணையற்ற தடுப்புக்கள் எல்லாம்
நீதியை விலை பேசும் விசமிகளின் இழுத்தடிப்புக்களே

இறவா வரம் பேற்றாேர் யாருமிங்கில்லர்
இறப்பை எழுதுபவன் இறைவன்
நீதி தூக்கில் சாகிறது
நிரபராதிக்கு ஆயுள் தண்டனை

நீதி தேவதையே கண் திறந்து பாராயாே
மரணிக்கும் உண்மைகளை காக்க நீ வாராயாே
பழிசுமத்தும் பாதகரை படுகுழியில் தள்ளிவிடு
பாவமறியா மனிதத்தை நீதிக்காய் வாழவிடு
உண்மையும் நீதியும் மரணித்தால்
நீதியின் வேதம் தான் என்ன?

எழுதியவர் : அபி றாெஸ்னி (29-Jan-18, 8:41 am)
பார்வை : 140

மேலே