இவதான் எங்க அம்மா

வாடாப்பா பொன்னையா. அமெரிக்க போயி ஏழு வருசம் கழிச்சுத்தான் அம்மாவ பாக்கற ஞாபகம் வந்துச்சா.
😊😊😊😊
என்ன மன்னிச்சுக்கங்க அம்மா. அம்மா இங்க வா. என் அம்மாவுக்கு உன்ன அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.
😊😊😊😊😊
நான் ஒருத்தி குத்துக்கல்லாட்டம் இங்க இருக்குறேன். உனக்கு எப்படிடா பொன்னையா உனக்கு இன்னொரு அம்மா வந்தா? அதுவும் அவள எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறயா? நீ யாராவது கிழவியை தத்து அம்மாவா எடுத்துகிட்டயா?
😊😊😊😊😊
இல்லம்மா நான் கூப்பிடற அம்மா நானும பொன்மணியும் பெத்த பொண்ணு.
😊😊😊😊😊
எம் பேத்தியா? அவ பேரு என்னமோ தானியமோ பருப்போன்னு தொலைபேசியில சொன்னயே?
😊😊😊😊
ஆமாம் அம்மா. உம் பேத்தி பேரு தானியா. 'தானியா' - ன்னா 'அம்மா' - ன்னு அர்த்தம்.
😊😊😊😊😊😊
ஆகமொத்தத்தில தமிழ்ப் பேருங்களப் பிள்ளைங்களுக்கு வைக்கிறத கேவலமா நெனைக்கிறீங்க.

கலிகாலம்டா பொன்னையா. தமிழர்களே தமிழ மதிக்கிறதில்லை. மத்தவங்க எப்பிடிடா தமிழையும் தமிழர்களையும் மதிப்பாங்க?
😊😊😊
?????????????
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க.

எழுதியவர் : மலர் (29-Jan-18, 9:56 am)
பார்வை : 259

மேலே