குடியரசு

புருஷன் பெஞ்சாதியிடம் : அடியே, ஏண்டி இன்னிக்கும்
இப்படியே வழக்கம்போல
வேல செஞ்சுக்கிட்டிருக்க;
இன்னிக்கு நாம குடியரசாகி
என் வயசாகிறதடி, தெரியுமா உனக்கு ?

மனைவி ; என் யா வீணா வவ்வுத்தெரிச்சல் கொட்டிக்கிற
எனக்கென்னயா தெரியும் இதெல்லாம் ..............
தெரிஞ்சதெல்லாம் இந்த நாப்பது
வருடமாநம்ம கல்யாணம் ஆனதிலேந்து ,நீ
தினமும், 'குடியும்' குடித்தனுமாய் இருக்கியே
அது ஒண்ணுதாயா பாத்திருக்கேன்........
நான் உண்டு என் வேல உண்டுன்னு
இருக்கேன் கூண்டில் அடையா கிளிபோல
சொன்ன பேச்சு கேக்கா உனக்கு அடிமையா
கெடந்து...................நீ என்றும் 'குடி'கே அரசு
அதுவே நான் கண்டது ............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jan-18, 9:24 am)
Tanglish : kudiyarasu
பார்வை : 152

சிறந்த நகைச்சுவைகள்

மேலே