சிறந்த கமெடி கணவன் மனைவி

கணவன் : என்னது இதூ, தினசரி பேப்பர் விலை ஏறிகிட்டே போகுது?

மனைவி : நீங்தான் எந்தப் பேப்பரும் வாங்கறது இல்லை. அப்புறம் என்ன கவலை?

கணவன் : நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சன். இப்படி விலை ஏறினா பேப்பர் வாங்கறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான்.

-***-

ஞாபக மறதி கணவன் : எனக்கு பயங்கர ஞாபக மறதின்னு திட்டுவியே இன்னிக்கு எப்டி மறக்காம டிபன் பாக்சை ஆபிஸ்லேர்ந்து எடுத்துட்டு வந்தேன் பாரு.

மனைவி : மண்ணாங்கட்டி, இன்னிக்கு நீங்கதான் ஆபிசுக்கே போகலியே

-***-

கணவன் : நம்ம வீட்டுக்கு சாப்பிட ஏங்க மானேஜரை கூப்பிட்டிருக்கிறேன்.

மனைவி : என்ன திடீர்னு ?

கணவன் : அவர் மனைவியோட சாப்பாட்டை கொஞ்ச நாளா குறை சொல்லிக்கிட்டிருந்தாராம் அதான்.

-***-

கணவன் : நான் ஒரு ரூபாய் நாணயம் ஒண்ணைத் தொலைச்சிட்டேங்கறதுக்காக என்னை நாணயம் தவறியவன்னு உங்கப்பாகிட்டே நீ சொல்றது கொஞ்சம்கூட நல்லா இல்லே .. ..

மனைவி : ???

-***-


கணவன் : குழந்தை ஏன் அழறான் டாக்டர் ஊசி போட்டாரா .. .. ?

மனைவி : இல்லே .. .. அவர்தான் சரியான குழந்தை டாக்டர் ஆச்சே இவன் தின்னுக்கிட்டு இருந்த பிஸ்கட்டை அவர் பிடுங்கித் தின்னுட்டார் .. ..

-***-

எழுதியவர் : (31-Jan-18, 11:41 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 1229

மேலே