வைணவ உணவகம்
தமிழகம் வந்த போது பார்த்தேன்
எந்த நகரிலும் எங்கு பார்க்கினும் சைவ உணவகம் .
ஏன் ஒரு வைணவ உணவகம் கூட இல்லை ?
சைவர்கள் எண்ணிக்கை அதிகம் உண்மை .
அதற்காக ஒரு வைணவ உணவகம் கூட அனுமதிக்கக் கூடாதா ?
நான் கேட்கிறேன் ஏன் இந்த ஒருதலைப் பட்சம் ?
மூட நெய் பெய்து முழங்கை வழி வார கூடியிருந்து குளிர்ந்திடும்
அக்கரை அடிசில் எங்கு உண்பேன் ?
புளியோதரையும் வெண் பொங்கலும் யார் தருவார் ?
திருக்கண் அமுதும் சாத்தமுதும் யார் பரிமாறுவார் ?
(ஆயினும் நம் பெருமாளும் நாச்சியாரும் சுண்டலும் புளியோதரையும்
திருச்சியில் திருவரங்கன் ஆலயத்தில் வழங்கினர் .
இன்னொரு முறையும் கை நீட்டி வாங்கினால் என்ன என்று சிறுபிள்ளைத்தனமான
எண்ணம் தோன்றியது . செய்யவில்லை.)
.