காப்பாய் சிவனே---கலித்துறை

கலித்துறை :


தீபாவளி :
=======

புதுத்துகில் அணிந்து புன்னகை யவிழ்ந்து தேமலர்ப்போல்
இதழ்நிறை யினிப்பில் இன்னலை மறந்து காக்கைகளாய்
மதந்தனைத் துறந்து வண்ணமாய்க் கலந்தெல் லோருமொன்றாய்க்
கதிரொளி யுதித்துக் கந்தகங் குறைத்து நாம்மகிழ்வோம்...


இறைவடிவம் :
===========

அறத்தினில் நிற்போர் அருட்தரும் இறைவன் முடிவாழ்வார்
துறந்தவர் நரகின் துயர்களில் துயில்வார் மடிவீழ்வார்
மறத்தினில் தோற்போர் மறமறன் இரண்டில் புவிகாக்கும்
சிறந்தவர் மனத்தால் தேடிடும் இறையின் திருவடிவே...


காப்பாய் சிவனே :
=============

ஆசுறு புவியில் அறத்தினில் நடத்தல் அனல்வீழ்தல்
மாசுறு மனத்தோர் வாழ்இடம் கடத்தல் வனஞ்செல்தல்
தூசுறு விழியின் துயர்களாய் இவைகள் துயில்நீக்கும்
தேசுறு வடிவின் திருப்பதம் பணிந்தால் சிவன்காத்தே...

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 5:24 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 1445

மேலே