காலம் கடந்து போகுதே---கட்டளைக் கலித்துறை

கட்டளைக் கலித்துறை :


ஆடிப்பட்டம் தேடி விதை :
===================

வெங்கதிர் வீசிடும் வெம்மை தணிந்திடும் வெண்மதியாய்
பொங்கிவந் தேவெள்ளம் பொன்னி நதித்தீரம் போகுமாடித்
திங்களில் பொன்நிலம் செந்நெல் விதைத்தால் செழித்திடுமாம்
மங்களம் வந்திடும் வாழ்வின் வசந்தம் மலர்ந்திடுமே...


மற்றவர்க்கு உதவுதல் உயர்வு :
=======================

களர்நில வின்னற் களைந்துதெண் ணீர்வார்க்குங் கார்முகிற்போல்
வளப்பசி நோய்க்கு மருந்தாய்வண் கையுளோன் வந்தணைத்தல்
உளப்பிணி தோய்ந்தோன் உயிர்க்கரை யேற்றிட வொத்துழைத்தல்
வளர்பிறை யேற்கும் மலரன்ன விவ்வாணாள் வாழ்ந்துயர்வீர்...


காலம் கடந்து போகுதே :
==================

மலைத்தேன் றருமின்பம் வான்முகிற் போலீந்து வந்தணைத்தும்
உலைத்தீக் கனல்வீசி யூன்உயிர் வாட்டுநோய் ஒத்திருந்தும்
அலைமேல் நிலமிசை யாருயிர் வீழ்த்தியும் அம்பொழிலின்
மலர்த்தீண் டுதென்றற்போல் மாப்புயற் போற்காலம் வாழ்வினிலே...

எழுதியவர் : இதயம் விஜய் (30-Jan-18, 4:00 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 3965

மேலே