Wedding Kavithai Tamil

உணர்வினை மதித்து
உரிமைக்கு இடமளித்து
ஜயந்தெளிந்து
அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற
இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்
மன்றத்தில் வாழ்த்துக்கள்!
மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி
மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம்
மாலையிட்ட உறவு
மகத்தானது - அது
மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!
அன்பான உலகம்!
அறிவோடும் அன்போடும்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்

எழுதியவர் : (1-Feb-18, 9:48 am)
பார்வை : 46265

மேலே