என்னவள் கரங்களின் அழகு
இளமைப்பொங்கும் போற்றாமைக் கரங்களிரண்டு
அதில் அன்றலர்ந்த அத்தாமரை இதழ்கள் தானோ
அவள் உள்ளங்கைகளில் அவ்விரல்கள் அதில்
நேற்று பூசி எடுத்த மருதாணி தந்த சிவப்பு
நெஞ்சை அள்ளும் வனப்பு - சீரிய மணிக்கட்டு இரண்டில்
பசும்பொன்னில் பதித்த மாணிக்க காப்பு
இன்னும் பல பல நிறங்கள் கொண்ட கண்ணாடி வளையல்கள்
அசைந்துவரும் பதுமையென அவள் நடந்துவர
எழுப்பும் ஓசை சிற்றருவி ஓசை
அவள் கைகளுக்கு தங்கமும் மாணிக்க கற்களும்
எழில் தந்தனவா, இல்லை அவள் பொற்றாமை கரங்களின்
எழில் கண்டு அவை நாணி அவள் கைகளில்
தங்கிவிட்டனவா ...........அப்படித்தான் என்று
என் மனது சொல்ல, அச்சோ, அச்சோ, இவ்வழிகிய
கைகளில் என் கைகள் சேரும் நாள் ..............
பெண்ணே கலங்காதே அத்திருநாள் மணநாளுக்கு
காத்திருக்கிறேன் இங்கே உன் மணாளனாய் நான்.