முயற்சிசெய்

முன்னேற்றப் படிகளைஎண்ணி
முடமாகி நிற்காதே
முன்னேறிய படிகளைப்பார்
முயற்சிகூட தலைவணங்கும்

குளத்தின் ஆழம்காணாது
கூனிக்குறுகி நிற்காதே
குதித்து ஆழத்தைப்பார்
குளநீர்கூட வற்றிப்போகும்

மழை விழிகிறதென்று
மழைக்கு ஒதுங்காதே
மழையில் நனைந்துபார்
நோய்கள்கூட தொடத்தயங்கும்

துன்பங்களை ஏற்கவேண்டுமாயென
துடிதுடித்து அஞ்சாதே
துன்பத்தை நடபாக்கிப்பார்
தூரம்நின்று வேடிக்கைபாரக்கும்

இலக்கினை எட்ட
இடர்பட்டாலும் நிற்காதே
இயல்பாக நடந்துபார்
இலக்குகூட இலகுவாகும் !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (5-Feb-18, 1:36 pm)
பார்வை : 1995

மேலே