இறைவன் அருள் தேடி

அன்புக்கு அடிபணியமனம் கொடு!🌼
ஆகாயம் தேடும் சக்தி கொடு!🌼
இயற்கைசிதைக்காஇதயம்கொடு!🌼
ஈன புத்தி இல்லா இம்மை கொடு!🌼
உறவென்று யார்க்கும் உதவிட உத்தி கொடு!🌼
ஊரோடு ஒத்துப் போகும் சாரம் கொடு!🌼
எனக்கென்று எதுவும் ஏற்காத எண்ணம் கொடு!🌼
ஏரோட்டி ஊருக்கு சோறூட்டும் புண்ணியம் கொடு!🌼
ஐந்து புலன் அடக்கி ஆளும் தேகம் கொடு!🌼
ஒவ்வாதவை செய்வோரை ஒதுக்கி விடு!🌼
ஓயாமல் ஊருக்கு உதவும் உறுதி கொடு!🌼
ஔவியப்பேய்கள் அழித்து விடு!🌼
அஃறிணை ஆக இன்றி உயர் திணையாய் உயர்வு கொடு!🌼எல்லாம் வல்ல இறைவா! இவையெல்லாம் எனக்கு உனையன்றி யார் தருவார்;🙏🙏🙏🙏
(ஔவியம்=பொறாமை)

எழுதியவர் : பாலமுருகன்பாபு (4-Feb-18, 3:31 am)
Tanglish : iraivan arul thedi
பார்வை : 305

மேலே