எனது அடுத்த அடி
வேரற்ற மரத்தின் நிழல்
பொறுப்பற்ற வாழ்வு
சுவையில்லா வாழ்க்கை
நிகரில்லா அரட்டை
கடைமைக்கான படிப்பு
விருப்பமில்லா வேலை
உழைப்பிற்கில்லா ஊதியம்
சுற்றித்திரியும் சுதந்திரம்
பிடிக்காத உணவு
பிடித்தமில்லா வாழ்க்கைத்துணை
ரசனை கொள்ளா வாழ்க்கை
நெஞ்சிலிருக்கும் கனவுகள்
சொல்லத்தெரியா உதடுகள்
செய்யத்துடிக்கும் கைகள்
பறக்கத்துடிக்கும் கால்கள்
பொறுமையாய் நான்
உலகிற்கு என்னை எடுத்து காட்ட
என் திறமையும் நானும்
போட்டியிட
ஊதாரி என்ற திட்டு
சோம்பேரி என்ற வசனம்
மேலும் பொறுமையாய் நான்
இவ்வுலகம் என்னை மேல் நோக்கி பார்க்கும் என்ற நம்பிக்கையுடன்
எடுத்து வைக்கின்றேன்
எனது அடுத்த அடியை ......