இல்லை என்று சொல்லாதே...!
வாழ வழியில்லை என்று
வாய்ப்புகள் இல்லை
என்று வாதிடாதே வருந்தி
இருந்தும் விடாதே...!
ஈரைந்து விரல்களும் ஒரு
ஒருநூறு கணினிச்
சேர்ந்தாலும் கணிக்க முடியா
மூளையை தோய்யாது
உழைத்திடும் உடலும் தான்
உன்னிடம் உள்ளதே......!
எண்ணம்தனில் துணிவுக் கொள்
துணைத் தேடாது
செய்வதை துணிந்து சிறக்க
செய் வீழ்ந்தாலும்
வீழாது எழுந்து நிலேன் தோழா....!
வாழ்வும் வெற்றிகளும் நின்
வாசம் தானடா.....!